2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் பொங்கல் உற்சவம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரொமேஷ் மதுசங்க,சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.விஜயவாசகன்,நா.நவரத்தினராசா 


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலின் வருடாந்த  பொங்கல் உற்சவம் இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்றுவருகின்றது.

இதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து பக்தர்கள்  தூக்குக்காவடிகள், பறவைக்காவடிகளை  வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு எடுத்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர்.

இப்பொங்கல் உற்சவத்துக்கு  முன்னோடியாக கடந்த 02ஆம் திகதி  கடல் தீர்த்தம் எடுத்து காட்டா விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றி தொடர்ந்து 06 நாட்களுக்கு சிலம்பு கூறல் நடைபெற்றது.  07ஆம்  நாளான இன்றையதினம் பொங்கல் உற்சவம் நடைபெறுகின்றது.

இப்பொங்கல் உற்சவத்துக்காக காட்டா விநாயகர் கோவிலிலிருந்து பண்டப் பொருட்கள்; கண்ணகி அம்மன் கோவிலுக்கு  எடுத்துவரப்படுகின்றது.

பக்தர்கள் இன்றையதினம்   அதிகாலையிலிருந்து  அம்மனுக்கு பொங்கல் செய்வதுடன், ஆலயத்தினரால் மேற்கொள்ளப்படும் பொங்கல் இரவு நடைபெறவுள்ளது.












You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X