2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

குரு சஞ்சாரத்தை முன்னிட்டு விசேட பூஜை

Kanagaraj   / 2014 ஜூன் 13 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


குருபகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்கு இன்று வெள்ளிக்கிழமை மாலை (13)  5மணி 39 நிமிடத்தில் சஞ்சரிக்கின்றார் இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் முனைக்காடு  நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட கிரியைகள் மற்றும் பூசைகள் இன்று காலை 9.30மணிக்கு சிவ ஸ்ரீ சண்முகவசந்தன் குருக்களின் தலைமையில் ஆலய குரு சிவ ஸ்ரீ .வ.ஹரிகரசர்மாவும் இணைந்து நடாத்தினர்.

இதன்போது தோச நட்சத்திரங்களை உடையவர்கள் அர்ச்சனை செய்து மஞ்சள்பட்டு, கடலைமாலை, கடலைபிரசாதம், பூ, தேங்காய் என்பவற்றை யாகத்தின் போது அக்கினியில் இட்டு  தங்களது பரிகாரங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .