2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பேரம்பல வைரவர் ஆலய வேள்ளி

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-  நா.நவரத்தினராசா

தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலயத்தின் வருடாந்த வேள்வித் திருவிழா இன்று சனிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்றது.
 
நீதிமன்ற கட்டளைக்கமைய மூடி மறைக்கப்பட்ட மாதிரி  கொள்கலனில் வைத்து தனித்தனியாக 250 இற்கும் மேற்பட்ட கிடாய் ஆடுகள் இந்த வேள்வியின் போது வெட்டப்பட்டன.
 
ஒவ்வொரு ஆட்டினையும் தெல்லிப்பளை பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பரிசோதனை செய்த பின்னரே வெட்டப்பட்டன.
 
இதற்கு முன்னர் கடந்த சனிக்கிழமை (14) கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் வேள்வியின் போது 400 இற்கும் மேற்பட்ட கிடாய் ஆடுகள் வெட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .