2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நயினை நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவம் ஆரம்பம்

Kogilavani   / 2014 ஜூன் 27 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை சனிக்கிழமை (28) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மஹோற்சவத்தில் ஜுலை 11 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், மறுநாள் தீர்த்த உற்சவமும், 13 ஆம் திகதி தெப்ப உற்சவமும் இடம்பெறவுள்ளன.

மேற்படி ஆலயத்திற்கு நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதுடன், அவர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் என்பன வேலணைப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், ஆலயத்திற்கு வரும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் நடவடிக்கையை ஆலய அன்னதான சபை மேற்கொள்ளவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .