2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நயினாதீவு அம்மன் பாடல் இறுவட்டுக்கள் வெளியீடு

Super User   / 2014 ஜூன் 29 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    எஸ்.குகன்


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் புகழ்பாடும் இரண்டு இறுவட்டுகள் வெளியீடு நயினாதீவு அமுதசுரபி அன்னதாக மடத்தில் சனிக்கிழமை (28) இடம்பெற்றது.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் சனிக்கிழமை (28) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதினையடுத்து இந்த இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

இன்னிசை வேந்தர் சங்கீத பூசணம் இசைப்பேரரசு பொன் சுந்தரலிங்கம் பாடிய நாகபூசணி அம்மன் திருப்பள்ளியெழுச்சி திருவூஞ்சல் அடங்கிய 'அரவணைக்கும் ஆரமுது',  நயினை நாகபூசணி அம்பாள் பக்திப்பாடல்கள் அடங்கிய 'ஆழிப்பொன் முத்து' ஆகிய பாடல் இறுவட்டுக்களே வெளியிடப்பட்டன.

இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர், பக்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்;டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .