2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலய முதலாம் வருட அபிஷேக விழா

Super User   / 2014 ஜூன் 30 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.இஸட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு, தளுபத்தை,  கட்டுவை அருள்மிகு ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தின் முதலாம் வருட அபிஷேக விழா  (சம்பஸ்ஸரா விஞ்ஞாபனம்) ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.

காலை 7 மணிக்கு  நித்திய பூஜையுடன் நிகழ்வு ஆரம்பமானது. கிரியைகள் யாவும் நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குகதாச குகேஸ்வரக் குருக்கள் தலைமையில், ஆலயக் குரு சிவஸ்ரீ இராதா கிருஸ்ணன் குருக்கள் மற்றும் ஏனைய சிவாச்சாரியார்களின் உதவியுடன்  இடம் பெற்றது.

நண்பகல் இடம்பெற்ற பூஜை நிகழ்வில் மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா மற்றும் பாரியார் சகிதம் கலந்து சிறப்பித்தார்.

இரவு 7 மணிக்கு  திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து சுவாமி வீதி வலம் வருதல் மற்றும் அர்த்த சாம பூஜை என்பன இடம்பெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .