2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாற்குடபவனி

Kanagaraj   / 2014 ஜூன் 30 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலய பாற்குடபவனி நேற்று ஞயிற்றுக்கிழமை (29) மாலை நடைபெற்றது.

களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழாவின் 5ஆம் நாள் திருவிழாவைச் சிறப்பிக்கும் முகமாக களுதாவளை போற்றி நாச்சி குடும்ப மக்களினால் இப்பாற்குடப் பவனி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

ஆடல் பாடல் மற்றும் காவடி ஆட்டங்களுடன் களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பூசிக்கப்பட்ட பசும்பாலை ஏந்தி ஆலயத்தை வந்தடைந்தனர்.

பின்னர் மூல மூர்த்தியான சுயம்பு லிங்கப் பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு கிரியைகள் நடைபெற்றன. இதில் பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அபிஷேகக் கிரியைகள் யாவும், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக் குருக்களின் தலைமையில் நடைபெற்றன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X