2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சங்காபிஷேக பெருவிழா

Kanagaraj   / 2014 ஜூலை 02 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஆதி வலம்புரி ஆலய வருடாந்த  108 சங்காபிஷேக பெருவிழா இன்று (02) நடைபெற்றது.

30ஆம் திகதி திங்கட்கிழமை வாஸ்து சாந்தி இடம் பெற்று, 01ஆம் திகதி கடஸ்தானம் ஸ்தபன அபிஷேகம் வசந்த மண்டப விஷேட தீபாராதனை பூசைகள் இடம் பெற்று இன்று (02) யாகசாலைப்பூசை, அபிஷேகம், 108 சங்காபிஷேகம், சுவாமி உள்வீதி வலம்வரல் மற்றும் அன்னதான நிகழ்வுகளுடன் விழா முடிவுற்றது.

ஆலய வருடாந்த 108 சங்காபிஷேக பெருவிழாவிற்கான பூசைகளை பிரதம குரு வேதாகம வித்தகர் அலங்கார பூசனம் கிரியா கால சிரோன்மணி வே.கருணாகரன் குருக்கள்; நடாத்தி வைத்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .