2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குடமுழுக்கு பெருவிழா

Kanagaraj   / 2014 ஜூலை 04 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}



எஸ்.கார்த்திகேசு


கிழக்கிலங்கையின் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ சிவன் ஆலய மகாகும்பாபிஷேக  குடமுழுக்கு பெருவழா இன்று 04 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை காலை 09.45 மணியளவில் பூமழை பொழிய மூர்த்திகளுக்கான  மகாகும்பாபிஷேக  குடமுழுக்கு சிவனருளால் மங்களகரமாக இடம்பெற்றது.

விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ சிவன் ஆலய மகாகும்பாபிஷேக  குடமுழுக்கு பெருவிழா கிரியைகள் யாவும் கடந்த 30 ஆம் திகதி சிவாகம வித்யா பூ10ஷணம் சிவாச்சாரிய திலகம் கிரியாகாலமணி விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்ககளின் தலைமையில் ஆரம்பமாகி 03 ஆம் திகதி வியாழக்கிழமை ஆலய மூர்த்திகளுக்கு பக்தர்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இன்று 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை சிவாச்சாரியர்களின் வேதாகம மந்திர உற்சாடனத்துடன் மங்களகரமாக நாதஸ்வர ஓசைகள் முலங்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன் ஆலய மூலமூர்த்தியான சிவலிங்கப்பெருமானுக்கு பரிபாரன மூர்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேக  குடமுழுக்கு பெருவழா இடம்பெற்றது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X