2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருப்பணிச்சபை மடம் திறப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருப்பணிச்சபை மடம் திறந்து வைக்கப்பட்டது.

கலிங்கர் குல தலைவர் ஞா.துரையப்பா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிராம மக்களும் தான்தோன்றீஸ்வரர் ஆலய வண்ணக்கர்களும் பக்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன் போது தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குருக்களான சிவஸ்ரீ எம்.கே.சச்சிதானந்தம், சிவஸ்ரீ வி.சோதிலிங்கம், சிவஸ்ரீ எஸ்.சுதர்மன் குருக்கள் அகியோகர்களால் நடராசர் சிவகாமி திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகோற்சவம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .