2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

Super User   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்,வடிவேல்சக்திவேல் 

ஈழத்தின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை (08) சிறப்பாக நடைபெற்றது.

மூங்கிலாறும் மட்டக்களப்பு வாவியும் சங்கமிக்கும் தீர்த்தக் கேணியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தீர்தேற்சவம் நடைபெற்றது.
கடந்த, ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழா தொடர்ந்து  20 நாட்கள்; நடைபெற்றது.

இவ் ஆலயத்தில் ஆகமம் சாராத மௌன பூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது. இவ்வழிபாடானது பண்டைத்தமிழர்களின் வழிபாட்டோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது.

இன்றும் பண்டைய மரபும்,தமிழர்களின் அடையாளங்களும் இவ்வாலயத்தில் பேணப்பட்டு வருகின்றது.

மண்டூர் கந்தசுவாமி ஆலயம் 12ஆம் நுற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டது என்றும், வேடுவர்களால் கொத்துப்பந்தல் அமைக்கப்பட்டு ஆரம்பத்தில் வழிபாடு நடைபெற்று வந்துள்ளதென   வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .