2025 மே 17, சனிக்கிழமை

ஆன்மிக பாதயாத்திரை

Gavitha   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு, வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு,  மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆன்மிக பாதயாத்திரையானது இன்று செவ்வாய்கிழமை (10) ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது.

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமான யாத்திரை, எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை  வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை சென்றடையவுள்ளது. இந்த யாத்திரையானது ஐந்து நாட்களைக் கொண்டதாக இடம்பெறுகின்றது.

 ஆன்மிக பாதயாத்திரையில் இருநூறுக்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .