2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆன்மீக பாதயாத்திரை

George   / 2014 செப்டெம்பர் 11 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை நடாத்தும் வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆன்மீக எழுச்சி பாதயாத்திரை  குழுவினர் இன்று வியாழக்கிழமை (11) பகல், சித்தாண்டி  ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தினை வந்தடைந்தனர்.

இவ் யாத்திரிக குழுவினர் கடந்த 09ஆம் திகதி கால் நடையாக மண்டூர் கந்தசாமி முருகன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கிரான் குளம் சித்தி விநாயகர் ஆலயத்தினை அடைந்து அங்கிருந்து மயிலம்பாவெளி சித்தி விநாயகர் அலயத்தினை வந்தடைந்துடன் இன்று சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயத்தினை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் இன்று இரவு வாழைச்சேனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தினை சென்றடைந்து அங்கிருந்து மீண்டும் தமது யாத்திரையினை நாளை காலை வெள்ளிக்கிழமை (12) தொடர்வதுடன் வாகரை செல்வ விநாயகர் ஆலயத்தினை சென்றடைவார்கள்.

அங்கிருந்து சனிக்கிழமை (13) வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தினை சென்றடையவுள்ளனர். 

  



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .