2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு வாவியில் திருச்சொரூப பவனி

Thipaan   / 2014 செப்டெம்பர் 28 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா தேவாலய வருடாந்த திருவிழாவின் இறுதிநிகழ்வான திருச்சொரூப பவனி, இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு வாவியில் இடம்பெற்றது.

விசைப் படகுகளை இணைத்து அலங்கரிக்கப்பட்ட கப்பலேந்தி மாதாவைத் தாங்கிய திருச்சொரூப விசைப் படகு ஊர்தி, ஆலயத்துக்கு முன்புள்ள அமிர்தகழி வாவியிலிருந்து ஆரம்பமாகி கல்லடிப் பாலத்தினூடாக நகர ஒல்லாந்தர்; கோட்டையைச் சென்று தேவாலயத்தை நோக்கிச் சென்றது.

200 வருடங்களுக்கு முன்பு டச்சுக் கோட்டையை நோக்கி வந்த கப்பலானது நீரினுள் அமிழும் நிலை ஏற்பட்டபோது, கப்பலின் மாலுமி கப்பலை அனர்த்தத்தில் இருந்து காப்பாற்றினால் இவ்விடத்தில் ஆலயம் அமைப்பேன் என மாதாவிடம் வேண்டியதற்கிணங்க, கப்பல் தாழாது காப்பாற்றியமையால் இவ் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலய பங்குத் தந்தை டி. ஏ. யூலியன் தெரிவித்தார்.

கடந்த 15 வருடங்களாக வாவியில் திருச்சொரூப பவனி இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .