2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நவராத்திரி இறுதி நாள்

Gavitha   / 2014 ஒக்டோபர் 03 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு - வடிவேல்சக்திவேல்


நவராத்திரியின் இறுதி நாள் விஜயதசமியான வெள்ளிக்கிழமை (03)  பல இடங்களிலும் மிகவும் சிறப்புற நடைபெற்றன.

இதன்போது இந்து ஆலயங்கள், அரச, அரச சார்பற்ற காரியாலயங்கள், வீடுகள், பாடசாலைகள், கடைகள் போன்றவற்றிலும் ஆயுத பூசைகள் நடைபெற்றன.

தொழில்களுக்குரிய ஆயுதங்களை வைத்து பொங்கல், படைத்து, கல்வித் தெய்வமான சரஸ்வதி தேவிக்குரிய சகல கலாவல்லி பாமலைபாடி, பூஜைகள் இடம்பெற்றன.

கலை நிகழ்வுகளும், சமயற் சொற்பொழிவுகளும், அறக் கருத்துக்களும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



சிலை பிரதிஷ்டை

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி, தையல் பயிற்சியினைப் பெறும் பயிலுனர்கள், சமூகநலன்புரி அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் இணைந்து சரஸ்வதி பூஜையின் இறுதிநாளான் வெள்ளிக்கிழமை(03) கல்லூரி வளாகத்தில் கல்வி தெய்வம் சரஸ்வதிக்கு சிலை ஒன்றை பிரதிஷ்ட்டை செய்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடியினைச் சேர்ந்த சித்திரபாட ஆசரியரான கோபிநாதன்  பாக்கியராசா அவர்களால் வடிவமைக்கப்பட்டு, விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரிக்கு இச்சிலை வழங்கப்பட்டுள்ளது.



திருகோணமலை- எஸ்.கீதபொன்கலன்




   எஸ்.எம்.எம்.றம்ஸான்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .