2025 ஜூலை 09, புதன்கிழமை

தீமிதிப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்,எஸ்.பாக்கியநாதன்


கல்முனை, பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரு விழாவின் தீ மிதிப்பு வைபவம் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது.

கடந்த மாதம் 23ஆம்; திகதி ஆலயத்தின் திருக்கதவு  திறத்தலுடன் திருக் கொடியேற்றலும் இடம்பெற்று சுவாமி எழுந்தருளல்;, நாட்கால் வெட்டுதல், வாள் மாற்றுதல் வனவாசம், அஞ்சான வாசம், அருச்சுனர் பாசுபதம் பெறத் தவம் செய்தல், அரவாணைக் களப்பலியிடலும் இடம்பெற்று  07ஆம் நாளான  வெள்ளிக்கிழமை  வீர கும்பம் நிறுத்தி தீ மூட்டி,  மஞ்சள் குளித்து பக்தி பரசவத்துடன் பஞ்ச பாண்டவர்கள் தீ மிதித்தல் கிரியையை நிறைவேற்றினர்.

மேலும், சனிக்கிழமை பிற்பகல் தருமருக்கு முடி சூட்டி பாற்பள்ளயத்துடன் கல்முனை,  பாண்டிருப்பு ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரு விழா கிரியைகள் யாவும் நிறைவுபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .