2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஐயப்பன் விரத ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 18 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரிகர்களின் ஐயப்ப விரதத்துக்கான மாலை அணிவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (17) மட்டக்களப்பு கல்லடி காயத்திரி பீடத்தில் இடம்பெற்றது.
 
விரத பூசைகள் யாவும் சிவயோக செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார் மற்றும் சிவஸ்ரீ.எஸ்.உதயகுமார் குருக்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டன. இங்கு கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகிய பூசை, உடன் அபிஷேகப் பூசை மற்றும் மாலை அணிவிக்கும் பூசையும் நடைபெற்றன.
 
இந்நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மற்றும் சிவயோக செல்வன் த.சாம்பசிவம் சிவாச்சாரியார் ஆகியோரால் விரத முறை பற்றிய நற்சிந்தனைகளும் வழங்கப்பட்டன.
 
மட்டக்களப்பு கல்லடி காயத்திரி பீடத்தில் இம்மாதம் 17ஆம் திகதி தொடக்கம் தை மாதம் 15ஆம் திகதி வரை தினமும் மாலை 6 மணிக்கு கூட்டு வழிபாடு மற்றும் பூசைகள் என்பனவும் இடம்பெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .