2026 ஜனவரி 14, புதன்கிழமை

லூர்து அன்னை தேவாலயம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 16 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, நாவற்குடா பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட லூர்து அன்னை தேவாலயத்தை மட்டக்களப்பு, மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா, செவ்வாய்க்கிழமை (16) காலை திறந்து வைத்தார்.

நூறு வருடங்கள் பழமையான இந்த தேவாலயம், மக்கள் பங்களிப்புடன் 117 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது.

மேற்படி தேவாலயத்தின் பங்குத்தந்தை எக்ஸ்.ஐ.றஜீவன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன், திருப்பலியை மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா நடத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பங்குத்தந்தையர்கள், பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .