2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய 6ஆம் நாள் திருவிழா

Gavitha   / 2015 ஜனவரி 31 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் ஆறாம் நாள் திருவிழா வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்றது.


காலை உற்சவம் இடம்பெற்று மாலை யாக பூஜையின் பின்பு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம் வந்தது.


இந்நிகழ்வில், கல்லடி காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியாரினால் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றப்பட்டது.


கிரியைகளை மஹோற்சவக் குரு பிரம்மஸ்ரீ இலஷ்மீகாந்தக் ஜெகதீசக் குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எஸ். ராமதாஸ் குருக்கள் ஆகியோர் இணைந்து நடாத்தினர்.


எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03) கல்லடிக் கடற்கரையில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த மஹோற்சவம் நிறைவு பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .