Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரியில் பிரசித்திபெற்ற சக்திவாய்ந்த ஆலயமாக விளங்கும் இரத்தினபுரி திருவனாக்கட்டை நாட்டுக்கோட்டை நகரத்தார் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த தைப்பூச உற்சவம், ஞாயிற்றுக்கிழமை (01) கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது.
நாளை திங்கட்கிழமை (02) காலை 6.00 மணிக்கு 108 சஹஸ்ர சங்காபிஷேகமும், கொடியேற்றமும் நடைபெற்று மாலை 6.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெறும்.
நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (03) காலை 7.00 மணிக்கு கங்கைக் கரை தீர்த்த அபிஷேகத்துடன் தீர்த்த குட பவணியும் அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் நடைபெற்று பகல் அன்னதானமும் வழங்கப்படும். மாலை 4.30 மணியிலிருந்து வல்ல ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அழகு தேரில் மங்கள இசை முழங்க ஆலயத்திலிருந்து இரத்தினபுரி நகரம் மற்றும் கொமர்ஷல் சந்தி வழியாக அடியார்களுக்கு அருள்பாளிக்கவுள்ளார்.
மேற்படி ஆலயத்தின் தைப்பூச உற்சவ கிரியைகள் அனைத்தும் ஆலயத்தின் பிரதம குரு சத்தியநார் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
3 hours ago