2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மருதடி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம், இன்று திங்கட்கிழமை (02) காலை நடைபெற்றது.

காலை 6.30 மணியளவில் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் நடந்த கிரியைகளை தொடர்ந்து, 9.30 மணி தொடக்கம் 10 மணி வரையிலான சுப நேரத்தில் மூலமூர்த்திக்கான அபிஷேகம் பரிவார மூர்த்திகளுக்கான அபிஷேகமும் நடைபெற்றது.

மருதடி பிள்ளையார் ஆலயம் 2004ஆம் ஆண்டு பாலஸ்தானம் செய்யப்பட்டு கோவில் முற்றாக இடிக்கப்பட்ட நிலையில், கருங்கல்லினால் புதிதாக நிர்மணிக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு இறுதி வரை ஆலயத்தின் கட்டிடப் பணிகள் 250 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு, கருங்கல் ஆலயமாக மாற்றப்பட்டது.

இவ்வாலயத்துக்கான சிற்ப வேலைப்பாடுகளை இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்தபதிகள் மற்றும் சிற்ப கலைஞர்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .