Sudharshini / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, ஆரையம்பதி மாவிலங்குத்துறை அருள்மிகு ஸ்ரீ மாகா காளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு ஆச்சாரிய வர்ணம்,முகூர்த்த நிர்ணயம், மகா கணபதிஹோமம் என்பன நடாத்தப்பட்டன.
தொடர்ந்து, சனிக்கிழமை காலை சக்தி புண்ணிய யாகம், விநாயகர் பூஜையுடன் அடியார்கள் பால்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகமானது சிவஸ்ரீ உ.ஜெயதீஸ்வர சர்மாவின் ஒழுங்கமைப்பில் சிவாச்சாரிய திலகம், சிவஞானபாஸ்கரன் பிரம்மஸ்ரீ தானு வாசுதேவ சிவாச்சாரியரினால் நாடத்தப்பட்டது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.
29 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago