Kogilavani / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
திருக்கோணேஸ்வரர் பெருமானின் காவலுக்காக அமைக்கப்பட்ட பறையன்குளம், எல்லைக்காளி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை(3) தைபூசத்திற்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பன்குளம் நாமல்வத்தையில் இருந்த காட்டு வழியாக சுமார் 6 கிலோ மீற்றர் தூரம் சென்றால் இக்கோவிலை அடைய முடியும். ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் இங்கு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த, 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறினர். இவர்கள், இன்னமும் மீள்குடியமர்த்தப்படாத நிலையில் இப்பிரதேசம் பாலடைந்து காணப்படுகின்றது.
இக்கோயிலுக்கு செல்வதற்காக இந்து இளைஞர்; பேரவையின் ஏற்பாட்டில் நகரித்தில் இருந்து தொண்டர்கள் அழைத்துச் செல்லப்பட்டு காடுகளுக்கு ஊடாக வழி ஏற்படுத்தப்பட்டது.
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் தமது நேர்;த்தியை நிறைவு செய்வதற்காக நாமல்வத்தை என்னும் இடத்தில் இருந்து உழவு இயந்திரங்கள் மூலமாகவும், கால்நடையாகவும் பறையன்குளத்ததை சென்றடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago