2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு

Sudharshini   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா


மட்டக்களப்பு, கல்லடி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சனிக்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்றதாக ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.


இவ்வாலயமானது 300 வருடங்களுக்கு மேல் பழைமைவாய்ந்த ஆலயமாக போற்றப்பற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான மஹா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமானதுடன், இராஜகோபுர மஹா கும்பாபிஷேக பெருவிழா திங்கட்கிழமை (09) நடைபெறவுள்ளது.


வவுனியா குருமண்காடு ஸ்ரீவிநாயகர் ஆலய பிரதம குரு ஆகம கிரியா பாவலர், சிவாச்சாரிய திலகம், ஆகம கிரியாமணி சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .