2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருக்கோணேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் 22 வருடங்களின் பின்னர் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் புதன்கிழமை(11) காலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மும்மூர்த்திக்கும் பரிவாரங்களுக்கும் எண்ணெய்க்காப்பு சாத்துதல் சனிக்கிழமை(7) காலை 5மணிக்கு ஆரம்பமானது.


எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(10) நண்பகல் வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்துவதற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, கோட்டை வாசலில் இருந்து ஆலயம் வரை செல்வதற்கு இலவச போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக ஆலயத்தின் பஸ் வண்டி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


மலை உச்சியில் இருந்து ஆலயத்துக்கு செல்ல முச்சக்கர வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


அதற்காக 4 வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டள்ளன. அரச, தனியார் வாகனங்கள். மோட்டார் சைக்கிள்கள், ஆலயத்துக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


வாகனங்களில் இருந்து வருவோர் கடற்கரை முன்றலில் வாகனங்களை தரித்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருகோணமலை நகர சபையினர் வாகன தரிப்பிட சேவையை ஏற்படுத்தி உள்ளனர்.


ஆலய நம்பிக்கையாளர் சபையினரால் அனுமதி வழங்கப்பட்ட (பாஸ்)  வண்டிகளை மாத்திரம் பொலிஸார் கோட்டை வாசல் ஊடாக செல்வதற்கு அனுமதித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .