2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பஞ்ச ஈஸ்வரங்களின் தீர்த ஊர்வலம்

Gavitha   / 2015 பெப்ரவரி 17 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மகா சிவராத்திரி தினத்தையொட்டி தமிழ் நாட்டிலுள்ள கங்கை, யமுனை, கோதாவாரி மற்றும் மாணிக்ககங்கை, இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களின் தீர்த்தங்கள் ஊர்வலமாகக் கொண்டு செல்லும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (17) கல்லடியில் இடம்பெற்றது.

நாவலடி காயத்திரியம்மன் கோயிலில் உள்ள லிங்கமூர்த்திக்கு அபிஷேகம் செய்வதற்காக, மட்டக்களப்பு கல்லடி நீர்ப்பாசனத் திணைக்களத்திலிருந்து புனித தீர்த்தங்களை ஏந்தி ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி ஆரம்பமான ஊர்வலம், நாவலடி காயத்திரியம்மன் கோயிலைச் சென்றடைந்தது.

காயத்திரி தேவஸ்தான பிரதம குரு த. சாம்பசிவம் சிவாச்சாரியார் தலைமையில் ஆரம்பமான ஊர்வலத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். மோகன்ராஜ், காயத்திரியம்மன் ஆலய தலைவர் கே. செல்வநாயகம், மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் எஸ். அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .