Menaka Mookandi / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு, நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது.
தேற்றாத்தீவில் கடற்கரை வெண்மணல் பரப்பில் எழுந்தருளி பல ஆண்டுகாலமாக வடபத்திரகாளியம்பாள் அருள்பாலித்து வருகின்றார். இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் உற்சவம் சிறப்பாக ஆரம்பமானது. அன்றைய தினம் பால்குட பவனி இடம்பெற்று அம்பாளுக்கு சங்காபிசேஷம் செய்யப்பட்டு இந்த உற்சவம் ஆரம்பமானது.
நான்கு தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கில் திங்கட்கிழமை வீரகம்பம் வெட்டுதல், திருவிளக்கு பூஜை, அம்பாள் ஊர்வலம் என்பன நடைபெற்றன. நேற்று முன்தினம் புதன்கிழமை ஆலயத்தில் நோர்ப்பு நெல் குற்றுதல், நவசக்தி யாகம், நோர்ப்புக் கட்டுதல் நிகழ்வு மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.
இறுதியாக இன்று காலை அம்பாளின் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.
26 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago