2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தீ மிதிப்பு

Thipaan   / 2015 ஜூன் 13 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களுள் ஒன்றான புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான நேற்று வெள்ளிக்கிழமை மாலை (12) தீ மிதிப்பு நடைபெற்றது.

நேற்றுக் காலை முதல் அம்பாளுக்கும் அடியார்களுக்கும் காப்புக்கட்டும் நிகழ்வு ஆரம்பமாகி மாலையில் மட்டக்களப்பு அமிர்தகழி வாவியில் சமுத்திர நீராடல் நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டின் பலபகுதிகளிலுமிருந்து சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதிப்பில் கலந்து கொண்டு தங்கள் நேர் கடன்களை நிறைவேற்றினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.06.2015) இரவு கதவு திறத்தலுடன் அம்மனின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .