2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா

Thipaan   / 2015 ஜூன் 16 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வவுனியா, புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.

திங்கட்கிழமை காலை 6 மணிக்கு இடம்பெற்ற விஷேட அபிஷேக பூஜையை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து அடியவர்கள் பால் காவடி, ஆட்டகாவடி, தூக்குகாவடி எடுத்ததுடன் பொங்கல் பொங்கியும் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினார்கள்.

மாலை 5 மணிக்கு இடம்பெற்ற விஷேட அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து இரவு 10 மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, நாகதம்பிரான் சப்பறத்தில் எழுந்தருளி வெளி வீதியுலாவும் வந்தார்.

பொங்கல் விழாவில் பல அடியவர்கள் கலந்துகொண்டு நாகதம்பிரானின் அருள் கண்டு களித்தனர். அத்துடன் பால், முட்டை என்பவற்றையும் படைத்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .