2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நாகன்னி அம்மன் கோவில் திருவிழா

Suganthini Ratnam   / 2015 ஜூன் 19 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, சித்தாண்டி விநாயகர் கிராம அருள்மிகு ஸ்ரீநாககன்னி அம்மன் ஆலயத்தின்  25ஆவது வருடாந்த உற்சவம் நேற்று (18) வியாழக்கிழமை விநாயகர் வழிபாடு மற்றும் சித்தி விநாயகர் கோவிலிலிருந்து மடைப்பெட்டி எழுந்தருளச் செய்து  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.

நான்காம் நாள் திருவிழாவில்  பட்டெடுத்தல், 108 சங்காபிஷேகம் விநாயகர் கிராம மத்தி வாழ் மக்களின் ஏற்பாட்டில்; ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெறவுள்ளது. மஞ்சள் நீர், பாற்குடபவனி சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி கோவிலிலிருந்து எடுத்துவரப்பட்டு அபிஷேக ஆராதனை மற்றும் அம்மான் வள்ளி வட்டாரம்  விநாயகர் கிராம மேற்கு வாழ் மக்களின் ஏற்பாட்டில்  திங்கட்கிழமை (22) நடைபெறவுள்ளது. இறுதி நாளாகிய செவ்வாய்க்கிழமை தீ மிதித்தலுடன் அம்மனின் திருவிழா  இனிதே நிறைவுபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .