Princiya Dixci / 2015 ஜூன் 19 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்கோட்டை நகரத்தார், பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோவில் வருஷாபிஷேக உற்சவ அலங்காரத் திருவிழா, இம்மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறும்.
இதனைமுன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை (19) காலை 08 மணி தொடக்கம் 10 மணி வரை முகூர்த்தக்கால் நாட்டல் நிகழ்வு இடம்பெற்றது.
நாளை சனிக்கிழமை (20) காலை 5.30 மணிக்கு 'சதுர்த்திவிரதம்' கணபதி ஹோமம் நடைபெறும்.
எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 07 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு ஸ்நாபனபிஷேகம், விசேட பூஜை நடைபெற்று சுமாமி உள்வீதி உலா நடைபெறும்.
எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 06 மணியளவில் விநாயகப் பெருமான் சர்வாலங்கார பூஷிதராக நகர் வலம் வருவார்.
சுவாமி, காலி வீதி வழியாக ஜோசப் வீதி - டுப்ளிகேசன் வீதி - விசாகா வீதி - காலி வீதி - பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம் - மாணிக்க விநாயகர் ஆலயம் - மீண்டும் காலி வீதி வழியாக பம்பலப்பிட்டி அரச தொடர்மாடி சென்று காலி வீதி வழியாக ஆலயத்தை வந்தடைவார்.
பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோவில் வருஷாபிஷேக உற்சவ அலங்காரத் திருவிழா நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்துகொண்டு இறை அருளையும் ஆசியையும் பெறுமாறு ஆலய பிரதம அறங்காவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026