2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வருடாந்த அபிஷேக நிகழ்வுகள்

Gavitha   / 2015 ஜூலை 07 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மன்னார் வீதியில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த அபிஷேக நிகழ்வுகள் திங்கட்கிழமை (06) மதியம் ஆலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது, 1008 சங்குகளால் அபிஷேகமும் விஷேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன. பூஜை வழிபாடுகளை ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள் நடத்தி வைத்தார்.

இந்நிகழ்வில், ஆலயத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வின் இரண்டாவது வருட நிறைவையொட்டியே இந்த வருஷாபிஷேக நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .