2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம்

Thipaan   / 2015 ஜூலை 18 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் நேற்று வெள்ளிக்கிழமை(17) நடைபெற்றது.

வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த முருகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் எழுந்தருளிய முருகப்பெருமான் அடியார்களினால் வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகே அமர்த்தப்பட்டார்.

அங்கு இடம்பெற்ற பூஜைகளின் பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

ஆலய வண்ணக்கர் தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற  கிரியைகளை ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம்குருக்கள் நடாத்தி வைத்தார்.

கதிர்காம யாத்pரைக்காக நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து வருகை தந்த அதிகளவான யாத்திரியர்கள் உகந்தை முருகன் ஆலயத்தில் தங்கியிருந்து நேற்று இடம்பெற்ற கொடியேற்ற வழிபாடுகளில் கலந்து கொண்டனர்

பின்னர் தங்களது புனிதப்பணயத்தை உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து மேற்கொண்டனர்.

இதேவேளை, பெருமளவிலான பௌத்த அடியார்களும் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஆலயத்தின் கொடியேற்றத்தினை தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவுடனும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி இடம்பெறும் சமுத்திர தீர்த்தோற்சவத்துடனும் இவ்வருட திருவிழா நிறைவுறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .