Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 29 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் சித்திரத்தேர் நகர்பவனி, இன்று புதன்கிழமை (29) ஆரம்பமானது.
நகர்பவனியின் முதல் நாளான இன்று (29) காலை 8.30 மணிக்கு தேவஸ்தானத்திலிருந்து நகர்பவனி ஆரம்பமாகி பிரதான வீதி, கோட்டை யோர்க் வீதி, ஜனாதிபதி மாவத்தையூடாக காலிமுகத்திடலிருந்து காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி சந்தி வழியாக சம்மாங்கொடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை சென்றடைந்து இரவு அங்கு வீற்றிருப்பார்.
நாளை வியாழக்கிழமை (30) பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சுவாமிக்கு வழமையான பூசை , ஆடிவேல் அர்ச்சனை என்பன இடம்பெறும்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை (31) வழமையான பூசைகளுடன் வெள்ளவத்தை மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவம், ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சுவாமி மயில்வாகனக்காட்சி , ஆடிவேல்விழா அர்ச்சனை , பொளர்ணமி தின ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகம் என்பன இடம்பெறும்
சனிக்கிழமை (01) மாலை 6.15 மணியளவில் வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீ கதிர்; வேலாயுத சுவாமி , சித்திரத்தேரில் பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து காலி வீதியூடாக பம்பலப்பிட்டிய சந்தி, கொள்ளுப்பிட்டிய சந்தி வழியாக காலிமுகத்திடலை வந்தடைந்து அங்கு அருட்காட்சிபுரிவார்.
ஞாயிற்றுக்கிழமை (02) காலை 5 மணியளவில் காலிமுகத்திடலிருந்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம், ரெக்ளமேஷன் வீதி, காளிகோவில் சுற்றுவட்டம், செட்டியார் தெரு, ஐந்துலாம்பு சந்தி, பிரதான வீதி, கான் மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தை சென்றடையும். மீண்டும் பிரதான வீதி வழியாக இரண்டாம் குறுக்குத்தெரு, பிரதான வீதியூடாக சென்று நான்காம் குறுக்குத்தெரு, கெயிசர்வீதி சந்தி வழியாக முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் திரும்பி மீண்டும் பிரதான வீதி கான் மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம், பேங்ஷால் வீதி வழியாக முதலாம் குறுக்குத்தெரு தேவஸ்தானத்தை வந்தடையும்.
1 hours ago
4 hours ago
8 hours ago
22 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
22 Sep 2025