2025 மே 16, வெள்ளிக்கிழமை

புளத்சிங்கள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கொடியேற்றம்

Kogilavani   / 2015 ஜூலை 31 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

புளத்சிங்கள, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய, வருடாந்த ஆடித்தேர் திருவிழா நாளை சனிக்கிழமை(1) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதிவரை தொடர்ந்து நடைபெறவுள்ள இத்திருவிழாவில், ஸ்நாப அபிஷேகம், அலங்கார பூஜை, சுவாமி உள்வீதி வலம் வருதல் என்பன இடம்பெறவுள்ளன.

7ஆம் திகதி வெள்ளிக்கிழமை, வேட்டைத் திருவிழாவும் 8ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பாற்குட பவனியும் மாலை 6.30 மணிக்கு அம்பிகைக்கு விஷேட வசந்த மண்டப பூஜையும்; சித்திர தேர்பவனியும் நடைபெறவுள்ளது. சித்திர தேரானது புலத்சிங்கள் மில்லகந்தை திப்பட்டவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு செல்லவுள்ளது.

மறுநாள் காலையில் அவ் ஆலயத்திலிருந்து தேர் பவனி பக்தர்களின் பால்காவடி, பறவைக்காவடி சகிதம் புலத்சிங்கள இந்து மாமன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் மங்கள வாத்தியம் முழங்க புலத்சிங்கள நகர் அடியார்களுக்கு அருள்பாலித்த வண்ணம் ஆலயத்தை வந்தடைந்து அன்று பகல் 12.00 மணிக்கு மகேஸ்வர பூஜை இடம்பெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

அதனைதொடர்ந்து எதிர்வரும் 10ஆம் திகதி  திங்கட்கிழமை மாவிளக்கு பூஜையும் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மேற்படி தீர்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

ஆலய பூஜைகள் யாவும், ஆலய பிரதம குரு கிரியா ஆகம வித்தகர், கிரியா பாஸ்கரர் அலகார பூஷணம் சிவஸ்ரீ. ந.சந்திரலால் குருக்கள் தலைமையில்; நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .