2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

300 ஆண்டுகள் வரலாறு கொண்ட மாத்தளை வஹாக்கோட்டை தூய அந்தோனியார் தேவாலயம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)


யோசேவாஸ் மற்றும் யாக்கோமே கொன்சால்வேஸ் அடிகளார்களால் 1700ஆம் ஆண்டு காலப்பகுதியில் மத்திய மலைநாட்டில் மாத்தளை மாவட்டத்தில் ஓலையினால் அமைக்கப்பட்ட இந்த வஹாக்கோட்டை தேவாலயமே இலங்கையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட அந்தோனியார் தேவாலயம் என தேவாலயத்தின் அருட்தந்தை தெரிவித்தார்.

2ஆம் விமலதர்மசூரிய மன்னன் கண்டியை ஆட்சி செய்த காலத்தில் நிலவிய கடும் வரட்சி காரணமாக எல்லா மதத் தலைவர்களையும் மழை வேண்டி பிராத்திக்கும்படி ஆணையிட்டான். இதன்போது யோசேவாஸ் அடிகளார் இந்த வஹாக்கோட்டை ஆலயம் அமைந்துள்ள பகுதியில் 3 நாட்கள் தொடர்ந்து ஜெபித்து மழையை வரவழைத்தாக வரலாறு கூறுகின்றது.

தற்போது அமைந்துள்ள இந்த ஆலயம் 1938ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும்
இங்கு ஆனி மாதத்தில் ஊர் மக்களுக்கு ஒன்றும் யாத்திரிகர்களுக்கு ஒன்றும் என  இரண்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றது என தேவாலயத்தின் அருட்தந்தை மேலும் தெரிவித்தார்.

இந்த தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலுவைப்பாதையை தரிசிக்க ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு யாத்திரிகர்கள்; தினமும் வருகைதருகின்றனர்.  வௌ;வேறாக காட்சியளித்த  20 மாதா உருவங்களை இலங்கையில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும் என்றும் தேவாலயத்தின் அருட்தந்தை தெரிவித்தார்.

யாத்திரை காலம் இல்லாத காலத்திலும் அதிகளவான பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் இங்கு யாத்திரை மேற்கொள்வதாகவும் ஆலய அருட்தந்தை  தெரிவித்தார்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X