Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, கூழாவடி ஸ்ரீநாககன்னி அம்பாள் கோவிலின் கும்பாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு பாற்குடபவனியும் 108 சங்காபிஷேகமும் நேற்று திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் கோவிலிலிருந்து பாற்குட பவனி ஆரம்பமாகியது. பாற்குட பவனி கோவிலை சென்றடைந்ததும் ஸ்ரீநாகாதம்பிரான் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசேட யாகபூஜை நடைபெற்றதுடன், நாகாதம்பிரானுக்கு 108 சங்காபிஷேக விசேட பூஜையும் நடைபெற்றது.
கூழாவடி ஸ்ரீநாககன்னி அம்பாள் கோவிலின் வருடாந்த மகா சடங்கு விழா, இன்று செவ்வாய்க்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 30.08.2015 ஞாயிற்றுக்கிழமை அம்பாளின் திருக்கும்பம் சொரிதலுடன் இனிதே நிறைவுபெறும்.


30 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
09 Nov 2025