Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2024 மார்ச் 09 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி விரதத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (08) மாலை சமுத்திர தீர்த்தம் எடுத்துவந்து ஆதி சிவனாலயத்தில் சிவலிங்க அபிஷேகம் செய்யப்பட்டது.
ஊர்வலத்துடனான இந் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிவலிங்கத்திற்கு ஆலயத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் சமுத்திர தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர்
.பிரதேச செயலகம் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆதிசிவன் ஆலயம் ஆகியன இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
காலையில் மாணவரிடையே குருத்தோலை பின்னுதல், நிறைமுட்டிவைத்தல், கோலம் போடுதல் போன்ற பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகளில் போட்டி இடம்பெற்றது. அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
25 minute ago