2026 ஜனவரி 17, சனிக்கிழமை

தைக்குளிர்த்தில் சடங்கு

Editorial   / 2026 ஜனவரி 16 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வ.சக்தி         

மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற செட்டிபாளையம்  கண்ணகை   அம்மன் தைக்குளிர்த்தில் சடங்கு வியாழக்கிழமை (14) தைப்பொங்கல் தினத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் இடம்பெறும் பிரதான சடங்குகளில் தைக்குளித்தில் சடங்கும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகின்றது.

அந்தவகையில் தைப்பொங்கல் தினத்தில் மாலை வேளையில் நெல்லு குற்றுதல் பூஜையுடன் ஆரம்பமாகி விநாயகர் பானை வைத்தல், அம்மன் குளிர்த்தி பாடல் பாடுவது போன்ற பாரம்பரிய பத்ததி முறைப்படி அம்மனின் திருக்குளிர்த்தில் இடம்பெற்றது.

ஆலய கட்டாடியார் தேவராசாவின் தலைமையில் நடைபெற்ற இச் சடங்கின்போது அப்பகுதியைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X