Gavitha / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பாகிய பாத யாத்திரை வாழைச்சேனை பேத்தாளை வீரையடி விநாயகர் ஆலயத்ததைச் நேற்றுச் சனிக்கிழமை (17) வந்தடையந்தது.
இப்பாதயாத்திரையினை இலங்கை முதல் உதவிச் சங்கம், இந்து சமய தொண்டர் சபை, மற்றும் யாழ் சின்மயா மிஷன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
தற்போது மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தேர் திருவிழாவை முன்னிட்டு சைவ அடியார்களினால் புனித திருத்தல பாத யாத்திரையினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதனடிப்படையில், வெள்ளிக்கிழமை(16) யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய பாதயாத்திரையானது, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தது.
பாதயாத்திரையில் கலந்துகொண்ட யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்கள் மற்றும் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம், வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயம் உட்பட பல ஆலயங்களையும் தரிசனம் செய்துகொண்டு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர்.
மேற்படி யாத்திரை சிவலிங்கத்தின் உருவ தரிசனத்தினை பிரதேசத்தின் பொதுமக்கள் பலர் வீதியில் நின்று வழிபாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.




10 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
42 minute ago