Editorial / 2026 ஜனவரி 27 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்
பொகவந்தலாவ நகர் ஸ்ரீ ஈழத்து பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் 90வது வருட முத்தேர் பவனி செவ்வாய்க்கிழமை (27) அன்று வெகுவிமர்சையாக இடம் பெற்றது.
வசந்த மண்டபம் பூஜையின் பின்னர் மும்மூர்த்திகளின் உருவ சிலைக்கு முன்பாக பரதமொன்றும் அரங்கேற்றப்பட்டது.
அதன் பின்னர் அம்பாள், விநாயகப் பெருமான், முருகன் மற்றும் வள்ளி தெய்வானையோடு மும்மூர்த்திகளும் மேளதாளம் முழங்க உள்வீதி வந்தனர்
வசந்த மண்டப பூஜைகள் இடம் பெற்றதன் பின்னர் உற்சவ மூர்த்திகள் இரத்தத்தில் நகர்வலம் வந்தனர்.
இதன் போது நகரம் முழுவதும் அம்பாள் விநாயகர் பெருமான் மட்டும் மும்மூர்த்திகளுக்கும் விசேட பூஜைகளும் இடம் பெற்றது.
பொகவந்தலாவ நகர் ஸ்ரீ ஈழத்து பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 15ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. புதன்கிழமை (28) தீர்தோற்சவம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.












5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago