2025 மே 01, வியாழக்கிழமை

மாத்தளை கொடியேற்றத்தில் கொல்லிமலை சித்தர் பங்கேற்பு

Editorial   / 2024 பெப்ரவரி 02 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்தர்கள் ஞானபீடம் அறக்கட்டளை மற்றும் பன்னாட்டு கலாசார சர்வசமய ஆய்வுமையம் என்ற அமைப்பின் ஸ்தாபருமான வாழும் கொல்லிமலை சித்தர் சுவாமிகள் இன்று 2ம் திகதி (2.2.2024) மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக கொடியேற்ற உற்சவத்தில் கலந்துகொண்டு அடியார்களுக்கு அருளாசி வழங்குகின்றார்.

ஆன்மீகமும் பொதுநலத்தொண்டும் சிரமேற்கொண்டு வாழ்ந்து வரும் நமது சித்தர் அவர்கள் தனது சித்தர் பரம்பரையில் 4வது தலைமுறை சித்தராக பிறந்து வாழ்ந்து வருபவர். சித்தர்கள் ஞானப்பீடம் அறக்கட்டளை ஊடாக ஏழைஎளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்து வருகிறார்.

தனது பன்னாட்டு கலாசார சர்வசமய ஆய்வுமையத்தின் ஊடாக உலகெங்கும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கோட்பாட்டுக்கமைய தனது ஆன்மீக உபதேசமான 'பிரபஞ்சத்துள் நாம். பிரபஞ்சமே நாம்' என்ற தனது ஆன்மீக கொள்கைளை உணர்த்தும் வகையில் தனது முத்திரையை பதித்து வருபவர். பல்லாயிரக் கணக்கான சீடர்களை உலகெங்கிலும் உருவாக்கி, மக்களுக்கு ஆன்மீகக் கருத்துக்களை எளிய முறையில் தன் சித்தர் பாரம்பரிய முறைபடி எடுத்துக் கூறி அனைவரையும் அறவழியிலும் ஆன்மீக நெறியிலும் அழைத்துச் சென்று செல்வ செழிப்புடன் வாழவைப்பவர்.  இவரின் நோக்கமே, ஒரே உலகம், ஓரே கடவுள், அனைவரும் ஒருதாய் மக்களாய் வாழவேண்டும் என்பதேயாகும்.

இமயமலை, கொல்லிமலை, அகத்தியர்மலை, சஞ்சீவி மற்றும் இந்தியாவிலிருந்து பல்வேறு மலைகளிலிருந்து காணகிடைக்காத அரிய சஞ்சீவி மூலிகைகளுடன் இலங்கை வந்திருக்கும் சுவாமிகள் இலங்கை மக்கள் சுபீட்சமாக வாழவும். மனஅமைதி, உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் பெற்று குபேரனாய் வாழவும், ஓவ்வொரு மனிதனின் பிறவி இரகசியத்தை அறிந்து அனைத்து பிரச்சினைகளையும் சஞ்சீவி மூலிகை கொண்டும், யாகத்தின் மூலமும், தீர்வு காண செய்கிறார் வாழும் கொல்லி மலை சித்தர்.

உலக மக்கள் சுபீட்சமாக செல்வ செழிப்புடன் வாழவும், இலங்கையில் ஏற்பட போகும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்கவும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையிலிருந்து இலங்கையும் மக்களும் மீள்ச்சிபெறவும், இலங்கை வாழ் மக்களுக்கு தெய்வ ஆசி வேண்டியும், அரிய பெரிய சஞ்சீவி மூலிகைகளை கொண்டு கொழும்பிள் யாகங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரபஞ்ச ஆச்சாரியார்

வாழும் கொல்லிமலை சித்தர் சீடன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .