2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வருடாந்த அலங்கார உற்சவம்

Niroshini   / 2016 ஜூன் 15 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு-முனைக்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாளின் வருடாந்த அலங்கார உற்சவ சடங்கு இன்று புதன்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமானது.

இதனையொட்டி, எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை திருக்கம்பம் ஏற்றும் நிகழ்வும் 19ஆம் திகதி தீமிதிப்பும் இடம்பெறும்.

எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தலுடன் நிறைவுபெறவிருக்கின்றது.

சடங்கு காலங்களில் மதிய பூசை பகல் 01மணிக்கும் இரவு பூசை 12.30மணிக்கும் நடைபெறும்.

சடங்கை சிறப்பிக்கும் வகையில் பஜனை வழிபாடுகள், கதாப்பிரசங்கள், கலைநிகழ்வுகள் என்பனவும் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .