Editorial / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அருள்மிகு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அண்ணன் மகன் புகழனார் தலைமையிலான ‘வாரியார் சுவாமிகள் யாத்திரை குழுவினர்’, ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்தனர்.
இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக, கொழும்பு-13, ஜிந்துப்பிட்டி, ஜெயந்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு அக்குழுவினர் விஜயம் செய்தனர். இதன்போது, இலங்கை மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வும் குறையற்ற செல்வமும் பெற்றுச் சேமமாக வாழ வேண்டி, புகழனார் தலைமையில் விசேட கூட்டுப் பிரார்த்தனை இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது, இந்து சமய கலாசார நிதியத்தின் உறுப்பினர் எச். எச். விக்ரமசிங்க மற்றும் ஆலய அறங்காவலர் சபையின் உறுப்பினர் எஸ். சுந்தரம் பிள்ளை ஆகியோரை, யாத்திரை குழுவின் தலைவர் புகழனார் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்த ஆன்மீக நிகழ்வில் யாத்திரை குழுவின் உறுப்பினர்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



5 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago