Editorial / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உச்சியில் ஆளுநராக கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் அண்மையில் நடந்துகொண்ட விதம் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பொலிஸ் சீருடையணிந்து, விடுதியொன்றில் அரசாங்கத்துக்கும் பொலிஸாருக்கும் கண்டபடி திட்டியிருக்கிறார். அவரைச் சுற்றி மேலும் பல பொலிஸாரும் கடமையில் இருந்துள்ளனர்.
இதனைக் கண்ணுற்ற பொதுமக்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. “நம்ம ஆளுநர் பதவியை மாற்றிவிட்டாரோ?” என்றும் சிந்தித்துள்ளனர்.
இது பற்றி எப்படியோ கொழும்பில் உள்ள பொலிஸ் உயரதிகாரியின் காதுக்கு தகவல் கிடைத்துவிட்டது.
உடனடியாக அந்த உயர் அதிகாரி ஆளுநருக்கு அழைப்பை மேற்கொண்டு, “நீங்கள் அப்படி நடந்துகொள்ள காரணம் என்ன?” என வினவியிருக்கிறார்.
அதற்கு ஆளுநர், இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.
“மக்களுடைய பாதுகாப்பு பற்றிய ஒரு குறுந்திரைப்படத்தில் நடிக்கிறேன். அதில் எனக்கு பொலிஸ் பாத்திரம். அதற்கு முன்னோட்டமாகத்தான் நடித்துப்பார்த்தேன். எப்படியும் அரசியல்வாதிகள் நமக்கு நடிப்பு நன்றாக வரும்தானே” என்றாராம்.
அரசியல் என்றால் நடிப்பு என்பதை அவரும் ஒத்துக்கொள்கிறார் போல!
3 minute ago
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
1 hours ago