2023 செப்டெம்பர் 29, வெள்ளிக்கிழமை

உத்தி​யோகபூர்வ விஜயம்

Menaka Mookandi   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களுக்கு முன்னர், அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்றை வகித்த அமைச்சரொருவர், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, ஒஸ்ரியாவுக்குச் சென்றிருந்தார். மயில்களுக்குப் பிரசித்திபெற்ற இடத்தைச் சேர்ந்த வாயாடி அமைச்சரான இவர், உண்மையைச் சொல்வதில், அம்மா, அப்பா என்று கூடப் பார்க்கமாட்டாராம்.

ஓரிரு நாட்களுக்காக ஒஸ்ட்ரியா சென்ற இவர், அந்நாட்டுக்கு அருகிலுள்ள சுவிட்சர்லாந்துக்குச் செல்ல, பலத்த முயற்சி செய்தாராம். எப்படியோ சுவிஸுக்குச் சென்ற அவர், அங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றைப் பதிவு செய்து தங்கியிருந்தது மாத்திரமன்றி, சுவிஸிலுள்ள அனைத்து கைக்கடிகாரக் கடைகளுக்கு ஏறி இறங்கியது தான் மிச்சமாம்.

ஸ்விஸ் ரொலெக்ஸ் ரக கைக்கடிகாரமொன்றை வாங்க வேண்டுமென்ற அவரது நீண்ட நாள் கனவு தான், உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியை, சுவிஸில் களிக்கக் காரணமானதாம்.

எப்படியோர், கடை கடையாக ஏறி, இறங்கி, இறுதியில் நல்ல பெறுமதியான கைக்கடிகாரமொன்றைக் கொள்வனவு செய்துகொண்டாராம். அந்தக் கைக்கடிகாரத்தின் பெறுமதியை மட்டும் கேட்டுவிடாதீர்கள்... அது ​தெய்வ இரகசியம்...!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .