2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிருஷ்ணரின் மன விரக்தி

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில், அதிகளவு வாக்குப்பலம் உள்ள கிருஷ்ண​ரை, அரசாங்கத்தின் பிரபல அவைக்குள் உள்ளீர்ப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், அவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.

அவரோது கூட்டணி சேர்ந்திருந்த ம​னம், பாரம் போன்ற இருவரையும், அந்தப் பிரபல அவைக்குள் உள்ளீர்த்திருந்த நிலையில், கிருஷ்ணரை மாத்திரம் புறக்கணித்திருப்பது குறித்து, அவர் பெரும் மன வருத்தத்துடனும் கோபத்துடனும் இருக்கிறாராம்.

இது இவ்வாறிருக்க, அவையல்லாத பதவியொன்று வழங்கப்பட்டு, அதற்குள் பல வேலைத்திட்டங்களை உள்ளடக்குவதாகத் தெரிவித்திருக்கின்ற போதிலும், வேலைத்திட்டங்கள் ஒருபுறமிருக்க, ஒரு நிறுவனம் கூட பொறுப்பளிக்கப்படவில்லை என்றும் தனக்கான சரியானதொரு வாகனம் கூட கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பதவியைப் பெயருக்கு கொடுத்துவிட்டு, வேலையின்றி அமர்ந்திருப்பதாகத் தெரிவிக்கும் கிருஷ்ணர், மீண்டுமொரு பிரச்சினையை எழுப்பக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .