Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1582 – கிரெகொரியின் நாட்காட்டியை பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரி அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
1655 – போலந்தின் லூம்லின் நகரில் இருந்த யூதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
1815 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் (ஹன்லி)ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.
1878 – தோமஸ் எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.
1915 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியாவை முற்றுகையிட்டது.
1917 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
1932 – டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: முன்னாள் பிரெஞ்சு முதல்வர் பியேர் லாவல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1951 – மெக்சிக்கோவின் லூயி மிரமோண்டெஸ் முதற்தடவையாக கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.
1966 – ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
1970 – மெல்பேர்ண் நகரில் வெஸ்ட் கேட் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1970 – அன்வர் சதாத் எகிப்தின் அதிபரானார்.
1987 – பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்தில் பெரும் புயல் கிளம்பியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
1990 – பனிப்போரைத் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் நோபல் பரிசு பெற்றார்.
1997 – நாசாவின் ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனி கோளை நோக்கி ஏவப்பட்டது.
2001 – நாசாவின் கலிலியோ விண்கலம் ஜுப்பிட்டரின் சந்திரனுக்குக் கிட்டவாக 112 மைல் தூரம் சென்றது.
2003 – மக்கள் சீனக் குடியரசு முதற்தடவையாக சென்ஷோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.
பிறப்பு
கிமு 70 – வேர்ஜில், உரோமைப் புலவர் (இ. கிமு 19)
1542 – அக்பர், முகலாய மன்னன் (இ. 1605)
1844 – பிரீட்ரிக் நீட்சே, செருமானிய மெய்யியலாளர் (இ. 1900)
1881 – பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1975)
1897 – முடிகொண்டான் வெங்கடராம ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. செப்டம்பர் 13 1975)
1926 – மிஷேல் ஃபூக்கோ, பிரெஞ்சு சிந்தனையாளர் (இ. 1984)
1931 – அப்துல் கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர்
1931 – வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (இ. 2003)
1934 – என். ரமணி, இந்தியப் புல்லாங்குழல் இசைக்கலைஞர் (இ. 2015)
1957 – மீரா நாயர், இந்திய-அமெரிக்க நடிகை
1988 – மெசுத் ஓசில், செருமானிய காற்பந்தாட்ட வீரர்
இறப்புகள்
1389 – ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318)
1917 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது (பி. 1876)
1918 – சீரடி சாயி பாபா, இந்திய குரு (பி. 1838)
1946 – எர்மன் கோரிங், செருமானிய அரசியல்வாதி (பி. 1893)
1961 – சூர்யகாந்த் திரிபாதி, இந்திய எழுத்தாளர் (பி. 1896)
1987 – தோமசு சங்காரா, புர்க்கினா பாசோ அரசுத்தலைவர் (பி. 1949)
2009 – தருமபுரம் ப. சுவாமிநாதன், திருமுறை ஓதுவார் (பி. 1923)
2009 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, தமிழ் ஆத்திரேலிய எழுத்தாளர் (பி. 1946)
2012 – நொரடோம் சீயனூக், கம்போடியாவின் முதலாவது பிரதமர் (பி. 1922)
5 minute ago
16 minute ago
39 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
39 minute ago
46 minute ago