Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஓகஸ்ட் 08 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1509: இந்தியாவில் விஜய நகர பேரரசின் முதல் மன்னராக கிருஷ்ணதேவ ராயர் முடிசூடினார்.
1768: ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.
1848: மாத்தளை கிளர்ச்சி - இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.
1863: அமெரிக்க உள்நாட்டுப் போர் - டென்னசியின் இராணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜோன்ச்ன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தான். இந்நாள் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்னசியின் ஆபிரிக்க அமெரிக்கர்களினால் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.
1908: வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார்.
1942: இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1945: இரண்டாம் உலகப் போர் - சோவியத் ஒன்றியம் ஜப்பான் மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.
1945: ஐ.நா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ.நா.வில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.
1947: பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.
1949: பூட்டான் சுதந்திரம் பெற்றது.
1963: பிரிட்டனில் ரயிலொன்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் 26 லட்சம் ஸ்ரேலிங் பவுண் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
1967: ஏசியான் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1973: தென்கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய்-ஜுங் கடத்தப்பட்டார்.
1974: வாட்டர்கேட் ஊழல் விவகாரம் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக ரிச்சர்ட் நிக்ஸன் அறிவித்தார்.
1988: மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.
1989: ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா, கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1990: குவைட்டை கைப்பற்றிய ஈராக், அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1992: யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில், இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.
2000: அமெரிக்க உள்நாட்டுப் போர் - கூட்டமைப்பினரின் எச்.எல்.ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
2006: திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2007: நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை, கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.
6 minute ago
17 minute ago
40 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
40 minute ago
47 minute ago