Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஓகஸ்ட் 09 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1902 : ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான்.
1902 : யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.
1907 : இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகஸ்ட் 1 இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.
1942 : “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தைத் துவக்கியதற்காக, மகாத்மா காந்தி உட்பட பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார்.
1945 : இரண்டாம் உலகப் போர் - ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது ஐக்கிய அமெரிக்கா வீசிய, “கொழுத்த மனிதன்” எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000 முதல் 90,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.
1965 : சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.
1965 : ஆர்கன்சசில் டைட்டான் ஏவுகணைத் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில், 53 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1974 : வாட்டர்கேட் ஊழல் - அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.
1991 : யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10 இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும், 2000 ஆம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.
1992 : மயிலந்தனைப் படுகொலைகள் - இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மயிலந்தனை என்ற கிராமத்தில் 39 தமிழர் இலங்கைப் படைத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்
2006 : திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது, விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
7 minute ago
18 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
41 minute ago
48 minute ago